தமிழ்நாடுபொழுதுபோக்கு

ருசியான அவரைக்காய் சாம்பார் ரெசிபி..!

அவரைக்காயில் நாம் இப்போது ருசியான சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • அவரைக்காய் – 3
  • பூண்டு – 3
  • வெங்காயம் – 2
  • தக்காளி – 2
  • சீரகம் – 1/2 ஸ்பூன்
  • சாம்பார் தூள் – 2 ஸ்பூன்
  • துவரம்பருப்பு – 100 கிராம்
  • கடுகு – சிறிதளவு
  • கடலைப் பருப்பு- ½ ஸ்பூன்
  • காய்ந்த மிளகாய் – 3
  • பெருங்காயத் தூள் – ½ ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

அவரைக்காய், தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். அடுத்து துவரம்பருப்புடன், பூண்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 2 விசில்விட்டு இறக்கவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். அடுத்து வெங்காயம், தக்காளி, பூண்டு, அவரைக்காய், உப்பு சேர்த்து வதக்கவும். அடுத்து சாம்பார் தூள் பெருங்காயத் தூள் சேர்த்து கிளறி பருப்பை சேர்க்கவும். இந்தக் கலவை அனைத்தையும் குக்கரில் சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கினால் முருங்கைக்காய் சாம்பார் ரெடி…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: