பொழுதுபோக்கு

சுவை நிறைந்த, சத்தான முட்டை சாதம் செய்முறை!

பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்கு லஞ்ச் பாக்ஸில் எதைக் கொடுத்து அனுப்பினாலும் சாப்பிடாமல் திருப்பிக் கொண்டுவருகிறார்களா? நாளைக்கு என்னதான் லஞ்ச் செய்து கொடுப்பது என்று தினம் தினம் குழப்பம் வருகிறதா? கவலை வேண்டாம்… மீதம் வைக்காமல் சாப்பிடச் செய்வதற்கு சுவை நிறைந்த, சத்தான இந்த முட்டை சாதம் உதவும்.

தேவையான பொருட்கள்

வேகவைத்த சாதம் – ஒன்றரை கப்

முட்டை – ஒன்று

சின்ன வெங்காயம் – 5 (நறுக்கவும்)

மிளகுத்தூள் – அரைக்கால் டீஸ்பூன்

எண்ணெய் – 2 டீஸ்பூன்

உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை

அடுப்பில் பான் (pan) வைத்து எண்ணெய்விட்டு, சூடானதும் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கிய பின் முட்டையை உடைத்து ஊற்றி, சிறிது உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும் (முட்டையை உடைத்து கிண்ணத்தில் ஊற்றி, உப்பு போட்டு அடித்தும் சேர்க்கலாம்). முட்டை நன்றாக வெந்ததும் வேகவைத்த சாதம் சேர்த்து, 3 – 4 நிமிடங்கள் வதக்கி, மிளகுத்தூள் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கி, லஞ்ச் பாக்ஸில் வைத்து கொடுத்தனுப்பவும்.

சைடிஷ்: மஷ்ரூம் கறி

தேங்காய் – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை – அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன் சேர்த்து அரைத்து வைக்கவும். ஒரு வெங்காயம், பாதி தக்காளியை நறுக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு, சூடானதும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி, அரைத்த கலவை சேர்த்து, தண்ணீர் ஊற்றி தேவையான உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். பச்சை வாசனை நீங்கியதும் மஷ்ரூம் துண்டுகள் (7 அல்லது 8) சேர்த்து, நன்றாக வேகும்வரை அடுப்பில் வைத்து கெட்டியானதும் இறக்கவும்.

குறிப்பு

இந்த முட்டை சாதத்தை சைடிஷ் இல்லாமல் சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  சுவையான பூசணிக்காய் துவையல்!
Back to top button
error: