பொழுதுபோக்குதமிழ்நாடு

சுவையான வெண்டைக்காய் புளிக் குழம்பு..!

வெண்டைக்காய் ஞாபக சக்தியினை அதிகரிப்பதாக உள்ளது, இத்தகைய வெண்டைக்காயில் புளிக் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வெண்டைக்காய் – 1/4 கிலோ,
சின்ன வெங்காயம் – 15
புளி – எலுமிச்சை அளவு,
தக்காளி – 1,
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்,
மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
நல்லெண்ணெய் – தேவையான அளவு,
வெந்தயம்- கால் ஸ்பூன்,
கடுகு- கால் ஸ்பூன்,
கறிவேப்பிலை – தேவையான அளவு.

செய்முறை

வெண்டைக்காயை கழுவி துணியால் துடைத்து நறுக்கிக் கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை சிறிது சிறிதாக வெட்டிக் கொள்ளவும். அடுத்து புளியை தண்ணீரில் ஊறவிட்டு நன்கு கரைத்துக் கொள்ளவும்.

வெண்டைக்காயை வாணலியில் எண்ணெய் விட்டு வதக்கி தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுத்து வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் தக்காளி போட்டு வதக்கவும்.

அடுத்து புளிக் கரைசல், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் வெண்டைக்காய் புளிக் குழம்பு ரெடி.

Back to top button
error: Content is protected !!