பொழுதுபோக்குதமிழ்நாடு

சுவையான நிலக்கடலை சாதம்..!

நிலக்கடலையில் பொதுவாக நாம் சட்னியே செய்து சாப்பிட்டு இருப்போம். அந்தவகையில் இப்போது நிலக்கடலையில் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

நிலக்கடலை – 100 கிராம்
சாதம் – ஒரு கப்
வெங்காயம் – 3
பச்சைமிளகாய் – 4
கடுகு – ½ ஸ்பூன்
உளுந்து – ½ ஸ்பூன்
பூண்டு – 1
சீரகம் – ½ ஸ்பூன்

செய்முறை

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கிக் கொள்ளவும். நிலக்கடலையை வறுத்து தோலுரித்துக் கொள்ளவும்.
அடுத்து மிக்சியில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் நிலக்கடலை சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, பூண்டு, சீரகம் போட்டு தாளித்து அரைத்த பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கி சாதம் சேர்த்துக் கிளறினால் நிலக்கடலை சாதம் ரெடி…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: