பொழுதுபோக்குதமிழ்நாடு

சுவையான “மீன் மஞ்சூரியன்” ரெசிபி.. வீட்டில் செய்து அசத்துங்க..!

அசைவ பிரியர்களுக்கு மீன் என்றால் மிகவும் பிடிக்கும் என்று தான் சொல்ல வேண்டும். எப்போதும் போல் அல்லாமல் கிரேவி மற்றும் குழம்பு செய்யாமல், இன்று ஸ்பெஷலாக “மீன் மஞ்சூரியன்” ரெசிபி குறித்து இந்த பதிவில் காணலாம்..!!

தேவையான பொருட்கள்

மீன் – 500 கிராம்
உப்பு – 1/2 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள்- 2 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
முட்டை – 1
சோள மாவு – 3 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
பூண்டு – 3
இஞ்சி – 3
குடைமிளகாய் – 1
வினிகர் – 1 டீஸ்பூன்
சோயா சாஸ் – 1 1/2 டீஸ்பூன்
சில்லி சாஸ் – 2 டீஸ்பூன்
தக்காளி கெட்ச்அப் – 2 டீஸ்பூன்
உப்பு – 1/4 டீஸ்பூன்
மிளகு – 1/2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் – நறுக்கியது

செய்முறை

முதலில், மீனை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பின், அதில் மிளகாய் தூள், மிளகு தூள், சோள மாவு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இத்துடன் முட்டையின் வெள்ளையை மட்டும் சேர்க்க வேண்டும். நன்றாக பிசைந்து அதனை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இந்த கலவையை 15 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விட வேண்டும். பின், எண்ணெய் ஊற்றி மீனை பொரித்து எடுத்து கொள்ள வேண்டும்.

Capture2 20

பின், ஒரு சட்டியினை காய வைத்து அதில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் அதில் பூண்டு, இஞ்சி, வெங்காயம், கேப்ஸிகம் ஆகியவற்றை சேர்க்க வேண்டும். நன்றாக வதக்கி விட்டு கொண்டே இருக்க வேண்டும். பின், அதில் வினிகர், சில்லி சாஸ், தக்காளி கேட்சப், சில்லி சாஸ், சோயா சாஸ் ஆகியவற்றை கலந்து கிண்டி விட வேண்டும்.

Capture 74

பின், இதில் உப்பு மற்றும் மிளகு தூள் சேர்க்க வேண்டும். காரம் அதிகமாக வேண்டும் என்றால் சிறிதளவு மிளகாய் தூளையும் சேர்த்து கொள்ளலாம். பின், கடைசியாக இதில் பொரித்து வைத்துள்ள மீனை சேர்க்க வேண்டும். நன்றாக ஒரு முறை கிண்டி விட்டு இறக்கி விட வேண்டும். அவ்ளோ தான்!!! சுவையான “ஃபிஷ் மஞ்சூரியன்” ரெடி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: