பொழுதுபோக்குதமிழ்நாடு

சுவையான “மீன் பிரியாணி” ரெசிபி.. வீட்டில் செய்து அசத்துங்க..!

மீனில் குழம்பு, ப்ரை இது போன்ற ரெசிப்பிகளையே நாம் வீட்டில் செய்வோம், இன்று நாம் ரொம்பவும் ருசியாக அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையில் மீன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை:

  • மீன் – 1/2 கிலோ
  • அரிசி – 2.5 டம்ளர்
  • வெங்காயம் – 2
  • தக்காளி – 3
  • இஞ்சி- 1/2 ,
  • பட்டை- 3
  • லவங்கம்- சிறிதளவு
  • பச்சை மிளகாய்-3
  • பூண்டு – 1
  • புதினா- தேவையான அளவு,
  • மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
  • தனியாத்தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
  • தயிர் – 1/2 கப்
  • எலுமிச்சை- ½ ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

1. மீனை சுத்தம் செய்து வெட்டிக் கொள்ளவும், மேலும் இஞ்சி- பூண்டினை தோல் நீக்கி தண்ணீர்விட்டு அரைத்துக் கொள்ளவும்.

2. அடுத்து வெங்காயம், பச்சை மிளகாய், மற்றும் தக்காளியை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

3. அடுத்து குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, லவங்கம், வெங்காயம், இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, பச்சை மிளகாய் புதினா சேர்த்து வதக்கவும்.

4. அடுத்து மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், தயிர், எலுமிச்சை பழச் சாறு உப்பு, மீன், அரிசி, 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து விசில் விட்டு இறக்கினால் மீன் பிரியாணி!!

இதையும் படிங்க:  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று காலை இடியுடன் கூடிய கனமழை..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: