பொழுதுபோக்கு

சுவையான கத்திரிக்காய் வறுவல் செய்முறை!!

சுவையான கத்தரிக்காய் வறுவல் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதில் உள்ள நீர்ச்சத்து சருமத்தை மென்மையாக்கும். கத்தரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச்சத்து உள்ளது. கத்தரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும் உதவுகிறது.

தேவையான பொருட்கள்:

கத்தரிக்காய்-6,
மிளகாய் தூள்-2 தேக்கரண்டி,
கடலைமாவு- 2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள்- 1/2தேக்கரண்டி,
உப்பு-தேவையான அளவு,
எண்ணெய்- தேவையான அளவு.

செய்முறை:

முதலில் கத்தரிக்காயை வட்டவடிவத்தில் நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். அதன் பிறகு தண்ணீரை வடித்து விட்டு அதன் மேல் மிளகாய் தூள், கடலைமாவு, மஞ்சள்தூள், உப்பு போன்றவற்றையும் சேர்த்து கத்தரிக்காயின் மேல் எல்லா இடங்களிலும் படும் படி நன்றாக கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும்.

தொடர்ந்து அடுப்பில் தோசைக்கல்லை வைத்து எண்ணெய் தடவவும். கல் சூடானதும் அடுப்பை மிதமான சூட்டில் கத்தரிக்காய் துண்டுகளை பரப்பி வைத்து சுற்றிலும் எண்ணெய் விடவும். 2 நிமிடம் ஆனதும் திருப்பி போடவும். இதில் இரண்டு புறமும் பொன்னிறமானதும் எடுத்து விடவும். மீதமுள்ள எல்லா கத்தரிக்காய் துண்டுகளையும் இதே முறையில் வறுத்து எடுக்கவும். இப்போது சுவையான கத்தரிக்காய் வறுவல் ரெடி..!


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: