பொழுதுபோக்கு

சுவையான பலாக்காய் குழம்பு ரெசிபி!

பலாக்காய் அதிக நார்ச்சத்தினைக் கொண்டதாக இருப்பதால் உடல் எடையினைக் குறைப்பதோடு தசையினை வலுப்படுத்துவதாக உள்ளது.

தேவையான பொருட்கள்

பலாக்காய் – 12
தக்காளி – 2
சின்ன வெங்காயம் – 10
சோம்பு – ½ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
தேங்காய் – 1/4 கப்
மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
பட்டை -1 துண்டு
லவங்கம் – 2
கசகசா – 1 ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
தனியா – 1 ஸ்பூன்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கடுகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் பலாக்காயினை தோலினை சீவிக் கொள்ளவும்.

அடுத்து பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தனியா, மிளகு போன்றவற்றினை போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதேபோல் அடுத்து பட்டை, லவங்கம், சோம்பு, கசகசா, தேங்காய் என சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.

மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம் , கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தாளிக்கவும்.
அடுத்து வெங்காயம், பூண்டு, தக்காளி போட்டு வதக்கவும்.

அடுத்து வேகவைத்த பலாக்காய் சேர்த்து, அரைத்த பேஸ்ட், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

இறுதியில் கொத்தமல்லியைத் தூவி, இறக்கினால் பலாக்காய் குழம்பு ரெடி…!!


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  ஆஹா அருமையான சுவையில் மட்டன் சமோசா.. உடனே செய்து பாருங்க..!
Back to top button
error: