தமிழ்நாடுபொழுதுபோக்கு

சுவையான திண்டுக்கல் தலப்பாகட்டி மட்டன் பிரியாணி..!

பிரியாணிக்கு மிகவும் பெயர் பெற்ற திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

  • மட்டன் – 1/2 கிலோ
  • பாசுமதி அரிசி – 100 கிராம்
  • வெங்காயம் – 1
  • பச்சை மிளகாய் – 2
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன்
  • பட்டை – 2
  • ஏலக்காய் – 2
  • அன்னாசிப்பூ – 1
  • கிராம்பு – 2
  • மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
  • கொத்தமல்லி – கைப்பிடியளவு
  • புதினா – கைப்பிடியளவு
  • தேங்காய்ப் பால் – 1 கப்
  • உப்பு – தேவையான அளவு
  • தயிர் – தேவையான அளவு
  • நெய் – 2 ஸ்பூன்
  • எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

சிக்கனுடன் தயிர், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
அடுத்து சோம்பு, ஏலக்காய், பட்டை, அன்னாசிப்பூ, கிராம்பு என அனைத்தையும் மிக்சியில் போட்டு அரைக்கவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.

அடுத்து மிளகாய்த் தூள் மற்றும் அரைத்த பொடி, சிக்கன், பாசுமதி அரிசி அத்துடன் 400 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும்.

அடுத்து கொத்தமல்லி, புதினா, தேங்காய்ப் பால் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கினால் சுவையான திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி ரெடி…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: