பொழுதுபோக்குதமிழ்நாடு

சுவையான சோளமாவு காரப் பணியாரம்..!

சோளமாவில் நாம் தோசை செய்வது எப்படி என்று பார்த்திருக்கிறோம். இப்போது நாம் சோளமாவில் பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை

சோளம் – 200 கிராம்
உளுந்து – 70 கிராம்
வெந்தயம் – ½ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
கடுகு – ¼ ஸ்பூன்
சீரகம் – ¼ ஸ்பூன்
உளுந்து – ½ ஸ்பூன்
கடலைப்பருப்பு – ½ ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை

சோளம், உளுந்து வெந்தயம் அனைத்தையும் சுத்தம் செய்து 5 மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.
அடுத்து சோளத்தை மட்டும் கொரகரப்பாக அரைத்து உளுந்து மற்றும் வெந்தயத்தை வழுவழுப்பாக அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து ஒரு கிண்ணத்தில் உளுந்து மாவு, சோள மாவு, உப்பு சேர்த்து நன்கு முதல்நாள் முழுவதும் புளிக்கவிடவும்.

மறுநாள் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்து இதனை மாவுடன் கலந்து பணியாரக் கல்லில் ஊற்றி வேகவிட்டு எடுத்தால் சோள பணியாரம் ரெடி…

இதையும் படிங்க:  இன்றைய ராசிபலன் (11.04.2021)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: