பொழுதுபோக்கு

சுவையான வாழைக்காய் கூட்டு ரெசிபி..!

வாழைக்காயில் இன்று அனைவருக்கும் பிடித்தமான கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 1
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
பாசிப்பருப்பு- 50 கிராம்
பச்சை மிளகாய் – 6
தேங்காய் – 1/2 மூடி
சீரகம் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – 1/2 ஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை

வாழைக்காயின் தோலைச் சீவி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
அடுத்து தேங்காயைத் துருவிக் கொள்ளவும். அடுத்து தேங்காயுடன் பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து குக்கரில் பாசிப்பருப்பு, வாழைக்காய், உப்பு, மஞ்சள் தூள்சேர்த்து குழைய வேக விடவும்.

அடுத்து வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலைச் சேர்த்து தாளித்து வேகவைத்த வாழைக்காய் கலவையைச் சேர்த்து வேகவிட்டு இறக்கினால் வாழைக்காய் கூட்டு ரெடி…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: