பொழுதுபோக்குதமிழ்நாடு

சுவையான வாழைப்பழ அப்பம்..!

வாழைப்பழத்தில் மிகவும் ஆரோக்கியமான இனிப்பு சுவை நிறைந்த அப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை

அரிசிமாவு – 1 கப்
வெல்லம் – 3
வாழைப்பழம் – 2
தேங்காய் – 4 துண்டுகள்
ஏலக்காய்த் தூள் – 1/2 ஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

வெல்லத்தைப் பொடித்து தண்ணீரில் போட்டு கரைக்கவும், தேங்காயைத் துருவிக் கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் வாழை பழத்தைப் போட்டு மசித்து, அரிசிமாவு, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், வெல்லக் கரைசல் சேர்த்துக் கலக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மாவை கரண்டியால் எடுத்து ஊற்றி பொரித்து எடுத்தால் வாழைப்பழ அப்பம் ரெடி.

இதையும் படிங்க:  சுவையான சிகப்பு மிளகாய் ஸாஸ் சிக்கன் ரெசிபி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: