வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களா? ரூ.67,700/- ஊதியத்தில் – மத்திய அரசில் வேலைவாய்ப்பு!!

மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அந்த அமைச்சகத்தில் Joint Director பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்காக கீழே முழு விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

நிறுவனம் – MIB
பணியின் பெயர் – Joint Director
பணியிடங்கள் – 01
கடைசி தேதி – 14.10.2021
விண்ணப்பிக்கும் முறை – விண்ணப்பங்கள்
வேலைவாய்ப்பு :

Joint Director பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 56 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

கல்வித்தகுதி :

  • அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்கள்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் Personnel Management and Administration or Mass Media Management or Mass Media Development பணிகளில் அதிகபட்சம் 03 முதல் 12 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.67,700/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். அது குறித்த தகவல்களை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் (14.10.2021) தங்களின் விண்ணப்பங்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Application Form – https://drive.google.com/file/d/10dH9D0XZqLVRY09_b1ptV32GnZsIqmq4/view?usp=sharing

Official Site – https://mib.gov.in/

இதையும் படிங்க:  சூப்பர்! ONGC நிறுவன வேலை – 410 காலிப்பணியிடங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: