தமிழ்நாடு

ஆன்லைன் மூலம் ஓட்டுநர் உரிமம் வழங்க முடிவு – அமைச்சரின் புதிய தகவல்!!

பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வராமலே ஆதார் அடிப்படையில் இணைய வழியில் ஓட்டுநர் உரிம சேவைகளை பெறலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் நேற்று (8.9.2021) சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் செப்டம்பர் 8ம் தேதி நடந்த சட்டப்பேரவையின் கொள்கை விளக்க குறிப்பு விவாதத்தில் போக்குவரத்துக்கு துறையின் சார்பாக பல முக்கிய அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் கேள்விகளுக்கும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பதில் அளித்துள்ளார். புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பினால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். சட்டப்பேரவையில் உரையாற்றிய அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் இதுவரை மகளிர் இலவச பேருந்துகளினால் 18 கோடிக்கும் அதிகமான பெண்கள் பலனடைந்துள்ளனர் என்று கூறினார்.

மேலும், பொதுமக்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு வராமலே ஆதார் அடிப்படையில் பழகுநர் உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்றவற்றை புதிதாக பெறுவதற்கும், ஓட்டுநர் உரிமத்தை புதுபித்தல், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் ஆன்லைன் முறையில் செய்யலாம் என்று அறிவித்தார். போக்குவரத்து துறையிலுள்ள ஓட்டுநர், நடத்துநர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அரசின் வருவாய் அதிகரிக்கும் வகையில், போக்குவரத்து துறை சார்பாக 10 இடங்களில் பெட்ரோல், டீசல் பங்குகள் தொடங்கப்படும் என்றார்.

மேலும் 500 மின்சார பஸ்கள், 2 ஆயிரத்து 213 டீசல் பஸ்கள் கொள்முதல் செய்யப்படும். மதுரை தெற்கு ஆர்டிஓ அலுவலகத்திற்கு ரூ.5.28 கோடியில் புதிய கட்டடம் கட்டப்படும். கோவை வடக்கு ஆர்டிஓ அலுவலகத்திற்கு4.98 கோடி செலவில் புதிய கட்டடம் ,திருத்தணி ஆர்டிஓஅலுவலகத்திற்கு சொந்த கட்டடம் கட்டப்படும் என்ற அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  கொடைக்கானல் ஏரி படகு சவாரிக்கான கட்டணம் உயர்வு!!
Back to top button
error: