வேலைவாய்ப்பு

ரூ.17,000/- சம்பளத்தில் பல்கலைக்கழகத்தில் Data Entry Operator பணிவாய்ப்பு!!

புதுச்சேரியில் செயல்படும் JIPMER எனப்படும் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அந்த அறிவிப்பில் Data Entry Operator பணிகளுக்கு 02 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள் :

  • விண்ணப்பிக்க விரும்புவோர் அதிகபட்சம் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் Graduation in life sciences தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • மேலும் பணியில் 1 ஆண்டு கால வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • மேலும் MS Word, MS Excel, MS Power point உள்ளிட்ட கணினி சாந்த பணிகளில் நல்ல திறன் பெற்று இருக்க வேண்டும்.
  • தேர்வு செய்யப்படுபவர்களுக்கு அதிகபட்சம் ரூ.17,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 12.08.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதற்கான அவகாசம் நாளையோடு முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.

Official PDF Notification – https://jipmer.edu.in/sites/default/files/Recruitment%20notice%20DEO%20August%202021.pdf

 

இதையும் படிங்க:  தமிழக அஞ்சல் துறையில் ரூ.8,050/- ஊக்கத்தொகையில் வேலைவாய்ப்பு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: