இந்தியா

இந்தியாவில் 2.5 லட்சத்தை தாண்டிய தினசரி கொரோனா பாதிப்பு!

கொரோனா வைரஸ் தினசரி தொற்று மீண்டும் ஒரு பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் 2,64,202 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று விட 6.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று விகிதம் 14.78 சதவீதமாக அதிகரித்துள்ளது. தற்போது, ​​நாட்டில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 5,753 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்றைய விட 16,785 பேர் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர், நேற்று 2,47,417 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், இன்று 2,64,202 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. மற்றும் கடந்த 24 மணி நேரத்தில் 1,09,345 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீட்டுள்ளனர்.

தற்போது, கொரோனா தொற்றுக்கு ​​சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 12,72,073 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 315 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை மொத்தமாக 4,85,350 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: