இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு? 7வது ஊதியக்குழு கணக்கீடு!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மூன்று தவணைகளாக நிலுவையில் வைத்திருந்த அகவிலைப்படி உயர்வு கடந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் அகவிலைப்படி உயர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.

மத்திய அரசு கடந்த 2020 ஜனவரி முதல் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கான DA மற்றும் DR உயர்வை கொரோனா பெருந்தொற்று காரணமாக நிறுத்தி வைத்திருந்தது. இறுதியாக ஊழியர்கள் 17% அகவிலைப்படியை பெற்று வந்தனர். ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள DA உயர்வை வழங்குவதற்கு மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் முதல் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், ஜூலை 1, 2021 முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு வழங்குவதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், இந்த உத்தரவு ஜூலை மாதம் முதலே அமலுக்கு வருவதாகவும் அறிவித்தது.

இதனால், 2020 ஜனவரியில் 4%, ஜூன் 2020 இல் 4% மற்றும் ஜனவரி 2021 இல் 3% என்ற அளவில் அகவிலைப்படி அதிகரித்து , தற்போது 28% ஆக அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ மற்றும் டிஆர் ஜூன் 30 ம் தேதி வரை 18 மாத காலமாக நிலுவையில் வைத்திருந்ததால் மத்திய அரசு ரூ.34,402 கோடியை சேமித்துள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். பொதுவாக வருடத்திற்கு இரண்டு முறை DA உயர்த்தப்படுகிறது.

அந்த வகையில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட 11% DA உயர்வானது ஜனவரி 2020 முதல் ஜனவரி 2021 வரையிலான காலத்திற்கு ஆகும். 2021 ஜனவரி முதல் ஜூன் காலத்திற்கான டிஏ உயர்வை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை. AICPI அளித்துள்ள தகவலின் படி, விரைவில் ஊழியர்களுக்கான 2021 ஜனவரி முதல் ஜூன் மாத காலத்திற்கான DA விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும், DA 3% மேலும் உயர்த்தப்படும், என்பதால் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA 28% லிருந்து 31% ஆக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 31% ஆக உயர்த்தப்பட்டால், ஊழியர்கள் மாதம் தோறும் ரூ.540 அதிகமாக பெறுவார்கள். வருடத்திற்கு ரூ.6,480 சம்பளம் அதிகமாக பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  பஞ்சாப் முதல்வர் திடீர் ராஜினாமா..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: