தொழில்நுட்பம்

ஏர்டெல்லைத் தொடர்ந்து வியும் கட்டணம் உயர்வு.. பெரும் அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

வி எனப்படும் வோடாஃபோன் ஐடியா நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த பிரீபெயிட் கட்டணங்களின் சலுகையை அதிகரித்துள்ளது.

இந்த சலுகை கட்டணங்கள் ரூ.79ல் இருந்து ரூ.99 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், எஸ்எம்எஸ் பலன்கள் அடங்கிய சலுகை கட்டணங்கள் ரூ.30 உயர்ந்து ரூ.179 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தினமும் 1 ஜிபி டேட்டா வழங்கும் திட்டம் ரூ.219ல் இருந்து ரூ.269 ஆக அதிகரித்துள்ளது.

vi new traffic

இந்த கட்டண உயர்வு வருகிற நவ.25 தேதி முதல் நடைமுறைக்கு வரும் என வி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஏர்டெல் நிறுவனம் பிரீபெயிட் கட்டணங்களின் சலுகை உயர்த்தப்படுகிறது என அறிவித்தது. இதை தொடர்ந்து வி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  சூரியனை விட அதிக வெப்பம் கொண்ட நட்சத்திரங்கள் கண்டுபிடிப்பு!
Back to top button
error: