ஆரோக்கியம்தமிழ்நாடு

பொடுகுத் தொல்லையினை சரிசெய்யும் கறிவேப்பிலை ஹேர்பேக்!

பொடுகுத் தொல்லையினை சரிசெய்யும் வகையிலான ஒரு ஹேர்பேக்கினைத் தான் நாம் இப்போது பார்க்கப் போகிறோம். அதாவது கறிவேப்பிலையில் ஹேர்பேக்கினை எப்படித் தயார் செய்வது என்றும், எப்படிப் பயன்படுத்துவது என்றும் பார்க்கலாம்.

தேவையானவை:

கறிவேப்பிலை – கைப்பிடியளவு

தயிர்- கால் கப்

நல்லெண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை:

1. கறிவேப்பிலையினை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.

2. அடுத்து அத்துடன் தயிர் சேர்த்து மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

3. இதில் நல்லெண்ணெய் கலந்தால் கறிவேப்பிலை ஹேர்பேக் ரெடி.

இந்த கறிவேப்பிலை ஹேர்பேக்கினை தலைமுடியில் அப்ளை செய்து, சீயக்காய் கொண்டு அலசினால் பொடுகுத் தொல்லை சரியாகும்.

Back to top button
error: Content is protected !!