ஆரோக்கியம்தமிழ்நாடு

தலைமுடிப் பிரச்சினைகளைச் சரிசெய்யும் கறிவேப்பிலை சட்னி!

தலைமுடிப் பிரச்சினைகள் அனைத்திற்கும் பெரும் தீர்வாக இருப்பது கறிவேப்பிலைதான். இந்த கறிவேப்பிலையில் சட்னி செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

தேவையானவை

கறிவேப்பிலை- ½ கப்
காய்ந்த மிளகாய் – 1
பச்சை மிளகாய்- 3
கடுகு- 1/4 ஸ்பூன்
உளுந்து – ¼ ஸ்பூன்
பூண்டு – 1 முழுதாக
புளி – நெல்லிக்காய் அளவு
தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை

வாணலியில் எண்ணெய்விட்டு கொடுக்கப்பட்டுள்ள கறிவேப்பிலை, புளி, காய்ந்த மிளகாய், பூண்டு, பச்சை மிளகாய், தேங்காய் போட்டு வதக்கவும்.
அடுத்து மிக்ஸியில் வதக்கிய பொருட்களைப் போட்டு உப்பு சேர்த்து அரைக்கவும்.
அடுத்து வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு, உளுந்து போட்டு தாளித்துக் கொட்டினால் கறிவேப்பிலை சட்னி ரெடி.

Back to top button
error: Content is protected !!