தமிழ்நாடு

12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடத் திட்டம் குறைப்பு – அரசுக்கு கோரிக்கை!!

தமிழகத்தில் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடந்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி 12ம் வகுப்புக்கு 2021-22 கல்வியாண்டில் பாட திட்டத்தை குறைக்குமாறு அரசுக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளது.

நடப்பு ஆண்டின் 12ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் அவர்களின் முதல் பொதுத்தேர்வை மார்ச் 2022 இல் எழுதுவார்கள். அவர்கள் இதற்கு முன்னதாக பொதுத்தேர்வில் கலந்து கொண்டதில்லை. சிபிஎஸ்இ கல்வி வாரியம் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்புக்கான சிறப்பு மதிப்பீட்டு திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி, மாணவர்களுக்கு கல்வியாண்டில் இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெறுவதால் 12ம் வகுப்பு பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும் என்று பல பள்ளிகளின் நிர்வாகிகளும் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். எம்.சி.சி உயர்நிலைப்பள்ளி முதல்வர் ஜிஜே மனோகர் அவர்கள், பாடங்களில் உள்ள முக்கிய பகுதிகள் சமரசம் செய்யப்படாமல், உயர் வகுப்புகளுக்கு தேவையான பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தேவையற்ற பகுதிகளை நீக்குவதற்கு மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

மற்றொரு பள்ளியின் முதல்வர் எம்.சதிஷ்குமார், சிபிஎஸ்இ.,ன் அறிவிப்பின் படி பார்த்தால் கல்வியாண்டு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படும். நகர்புறங்களில் உள்ள பள்ளிகள் ஆன்லைன் பாடத்திட்டங்களை நடத்தி முடித்தாலும், ஆன்லைன் வகுப்புகளுக்கு வசதி இல்லாத கிராமப்புற பள்ளிகள் மிகவும் சிரமப்படும். எனவே, பாடத்திட்டத்தை குறைப்பது குறித்து மாநில அரசு பரிசீலிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சைதாபேட்டையில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியரான பத்மாஜா அவர்கள், “முழு பாடத்திட்டத்தையும் இரண்டு ஆன்லைன் வகுப்புகளில் நடத்தி முடிப்பது கடினம்” என்றும் அரசு மாணவர்களுக்கு அதிக இணைய வசதியினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: