உலகம்

கொரோனாவுக்கு எதிராக தயாராகி வரும் முக்கியமான தடுப்பூசிகளின் தற்போதைய நிலை

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவுக்கு எதிராக உலக நாடுகள் தடுப்பூசி தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. இதன் பலனாக சுமார் 200 தடுப்பூசிகள் ஆய்வு முதல் அவசர பயன்பாடு வரை பல்வேறு கட்டங்களில் உள்ளன.

இதில் முக்கியமான சில தடுப்பூசிகளின் தற்போதைய நிலை குறித்த ஒரு பார்வை.

இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம், இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் இணைந்து தயாரித்த தடுப்பூசி கோவோக்சின். 3 வார இடைவெளியில் 2 டோஸ்களாக போடப்படும் இந்த தடுப்பூசி வருகிற 16-ந் தேதி முதல் இந்தியாவில் பயன்பாட்டுக்கு வருகிறது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் இணைந்து தயாரித்த தடுப்பூசியை, இந்தியாவில் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் தயாரிக்கிறது.

4 வார இடைவெளியில் 2 டோஸ்களாக போடப்படும் இந்த தடுப்பூசிக்கு இங்கிலாந்து, அர்ஜென்டினா, மெக்சிகோ, இந்தியா ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்து உள்ளன.

இதைத்தவிர அமெரிக்காவின் மாடர்னா, பைசர், ரஷியாவின் ஸ்புட்னிக் வி, சீனாவின் கான்விடிசியா, கொரோனாவேக் ஆகிய தடுப்பூசிகள் அவசர பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

ரஷியாவின் வெக்டர், அமெரிக்காவின் நோவாவேக்ஸ், ஜான்சன் அன்ட் ஜான்சன் போன்ற நிறுவனங்களின் தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் உள்ளன.

Back to top button
error: Content is protected !!