இந்தியா

ஆந்திரா பிரதேச மாநிலத்தில் ஜூலை 1 முதல் 8 மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுகள் அமல் – எவற்றுக்கெல்லாம் அனுமதி!!!

மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து வரும் பட்சத்தில் நாளை (ஜூலை 1) காலை 6 மணி முதல் கிட்டத்தட்ட 8 மாவட்டங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

ஆந்திர பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக உள்ள 8 மாவட்டங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியுள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, மதுபான கடைகள், உணவகங்கள் மற்றும் பிற கடைகள் இரவு 9 மணி வரை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. தவிர மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு உத்தரவானது இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை அமல்படுத்தப்படும்.

எனினும் உணவகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களை மூடுவதற்கு ஒரு மணிநேர கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் ஜூலை 7 வரை அமலில் இருக்கும். இருப்பினும், கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, சித்தூர் மற்றும் பிரகாசம் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்படும் என முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

தற்போது விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம், குண்டூர், நெல்லூர், கடப்பா, அனந்தபூர் மற்றும் கர்னூல் உள்ளிட்ட இடங்களில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து கூடுதலாக மூன்று மணி நேரம் தளர்வுகள் அளிக்கப்படும் என அறிக்கை தெரிவித்துள்ளது. ஆந்திராவில் கொரோனா தினசரி பாதிப்பானது கடந்த 27 ஆம் தேதி அன்று 4,250 ஆக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: