இந்தியா

இன்று முதல் ஜனவரி 15 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – நாகலாந்து மாநில அரசு உத்தரவு!!

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவலுக்கு மத்தியில் தற்போது 8வது முறையாக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் ஜனவரி 15ம் தேதி வரை நீட்டித்து நாகலாந்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

நாகலாந்து மாநிலத்தில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் 2022ம் ஆண்டு ஜன.15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அம்மாநிலத்தில் கொரோனா 2ம் அலைத்தொற்று பரவல் காரணமாக கடந்த மே மாதம் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு வந்து டிச.15ம் தேதியான இன்று வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையில் நாடு முழுவதும் ஒமிக்ரான் மாறுபாட்டின் அச்சம் காரணமாக இக்கட்டுப்பாடுகள் ஜன.15ம் தேதி வரை அடுத்த 31 நாட்களுக்கு நீட்டிக்கப்படுவதாக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தற்போது பண்டிகை காலம் நெருங்கி இருப்பதால், நகரங்களில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு முற்படுவார்கள். இந்த காரணத்தை கருத்தில் கொண்டும், புதிய ஒமிக்ரான் மாறுபாட்டை முன்னிறுத்தியும் இத்தகையை கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. என்றாலும் பயணம் மேற்கொள்ளும் மக்கள் கட்டாயமாக முகவசங்களை அணிவது, சமூக இடைவெளியை உறுதி செய்வது, கூட்டங்களை தவிர்ப்பது போன்ற முறையான வழிகாட்டுதல் நடவடிக்கைகளை பின்பற்றும் படி கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.

அதே வேளையில் கொரோனா நோய் தொற்றுக்கு எதிராக தகுதியுள்ள அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் அம்மாநிலத்தில் உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள், தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்துவதில் ஆர்வம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஜனவரி 15ம் தேதி வரை பொது இடங்களில் 50% முதல் 100% வரை கூடுவதற்கு அனுமதி அளித்துள்ள அரசாங்கம், அவர்கள் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியையாவது எடுத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஞாயிறு ஊரடங்கு இனி கிடையாது – அரசு அதிரடி அறிவிப்பு!!
Back to top button
error: