இந்தியா

கர்நாடகாவில் ஜூன் 14-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு..!

கொரோனா பரவலை மேலும் கட்டுப்படுத்தும் விதமாக, கர்நாடகாவில் ஜூன் 14 வரை ஊடரங்கை நீட்டித்து, அம்மாநில முதலமைச்சர் திரு. எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடகாவில் கொரோனா ஊரடங்கு வரும் 7-ம் தேதி வரை அமலில் இருக்‍கும் என அம்மாநில அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. தற்போது அங்கு நாளொன்றுக்‍கு சராசரியாக 20 ஆயிரம் பேர் நோய்த்தொற்க்‍கு ஆளாகி வரும் நிலையில், நேற்று உயிரிழப்பு 510-ஐ தாண்டியுள்ளது.

தற்போது நிலைமை மோசமாக இருப்பதால், மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து, முதலமைச்சர் திரு. எடியூரப்பா தலைமையில் ஆலோசனைக்‍ கூட்டம் நடைபெற்றது.

அப்போது தலைநகர் பெங்களூரு தவிர கிராமப்புறங்களில் கொரோனாவின் தாக்‍கம் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்‍கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிலைமையை கட்டுக்‍குள் கொண்டு வர, ஊரடங்கை இன்னும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பது என முடிவு செய்யப்பட்டது.

தற்போது கடைபிடிக்‍கப்படும் ஊரடங்கு வரும் 14ம் தேதி வரை அமலில் இருக்‍கும் என முதலமைச்சர் திரு. எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

இந்த ஊரடங்கின்போது அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை செயல்படும் என்றும், உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் இருக்‍கும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: