உலகம்

கொரோனா நோயாளிகளுடன் கலந்துரையாடும் ரோபோ! புதிய முயற்சிக்கு குவியும் பாராட்டு..!

முதியவர்கள் மற்றும் கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுடன் தொடர்புகொள்ளும் வகையில் ஹாங்காங்கை சேர்ந்த குழுவினர் ரோபோட் ஒன்றை வடிவமைத்துள்ளனர்.

இதற்கு பலரும் தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த ரோபோட் செவிலியர் போல நீல நிற உடை அணிந்திருக்கும்.

இந்த ரோபோவிற்கு ஆசிய அம்சங்கள் ப்ரோக்ராமிங் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோ தனது மார்பு பகுதியில் உள்ள கருவி மூலம் மனிதர்களின் உடல் வெப்பத்தை பரிசோதிப்பது செயற்கை நுண்ணறிவு திறன் மூலம் நோயாளிகளின் பிரச்சினைகளை கண்டறியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்க முடியும் என அந்நிறுவனர் டேவிட்சன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: