ஆரோக்கியம்தமிழ்நாடு

வெயிலுக்கு உகந்த வெள்ளரிக்காய்!

நாம் பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகளுள் ஒன்று வெள்ளரிக்காய். பொதுவாகவே கோடைகாலங்களில் உண்ண கூடிய உணவு வகைகளில் வெள்ளரிக்காய் இன்றியமையாத ஒன்று. இந்த வெள்ளிரிக்காயில் 90% நீர்ச்சத்து நிறைந்துள்ளது. வெள்ளரிக்காயின் பயன்களை பற்றி இப்பதிவில் காண்போம்.

* வெள்ளரிக்காயில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், செரிமானத்துக்கு உதவுவதோடு, மலச்சிக்கலை போக்குகிறது.

* வெள்ளிரிக்காயை அடிக்கடி சாப்பிட்டால் , அதிகமாக பசியுணர்வை போக்கி ஆரோக்கியமான உடல்நிலை பெறலாம்.

* பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வழக்கமாக ஏற்படும் அதிக உதிர போக்கு மற்றும் கருப்பை சார்ந்த பிரச்சனைகளை வெள்ளரிக்காய் போக்குகிறது.

* வெள்ளரிக்காயில் உள்ள நீர்ச்சத்து சருமத்துக்கு ஈரப்பதத்தை அளிப்பதுடன், சருமத்தை இளமையாக வைத்து தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

* வெயில் காலங்களில் வெள்ளரிக்காயை அதிகமாக சாப்பிடுவதால் நீர்ச்சுருக்கு, சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கிறது.

இதையும் படிங்க:  கறைபடிந்த நகங்களை வெண்மையாக்க வேண்டுமா? இதோ சூப்பரான டிப்ஸ்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: