ஆன்மீகம்

கடக ராசிக் காரர்கள் என்னென்ன தொழில் அல்லது உத்யோகம் பார்த்தால் சிறப்பாக இருப்பார்கள்?

முயற்சி இருந்தால் எந்த ஒரு தொழிலும் சாதனையை படைக்கலாம். ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’ என்கிறது ஆன்றோர் மொழி. எனினும், ‘எனது சொந்த ராசிப்படி நான் என்ன தொழில் செய்யலாம்? அல்லது செய்தால் ஓரளவு வெற்றி பெற முடியும்?’ என்று கேட்பவர்களுக்காக நான் ராசி அடிப்படையில் சில தொழில் ஆலோசனைகளை அளித்து உள்ளேன். உங்கள் சொந்த ஜாதகத்தில் தொழில் ஸ்தானமான பத்தாம் இடம் நன்றாக வலுப்பெற்று இருக்கும் பட்சத்தில் தாராளமாக கீழ்கண்ட தொழில்களை நீங்கள் செய்யலாம். அந்த விவரங்கள் வருமாறு…

சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த கடக ராசி அன்பர்கள் முத்து, உப்பு, டிராவல் வியாபாரங்கள், தண்ணீர் மூலமாக பயன்பெறும் தொழில்கள் (வேளாண் தொழில், நீர் பாசன துறை) பான்சி கடைகள் வைத்தல், நடிகர்கள், எழுத்தாளர், பாடல் ஆசிரியர், பால், தயிர், மோர் வியாபாரங்கள், வெள்ளை பொருள்கள் உற்பத்தி துறை, சுண்ணாம்பு வியாபாரம், தங்கம், வெள்ளி மற்றும் கவரிங் கடைகள், சீட்டுப் பிடித்தல், மருத்துவர், பேச்சாளர் போன்ற இவற்றில் ஏதாவது ஒரு தொழில் அல்லது உத்யோகம் பார்த்தால் சிறப்பாக இருப்பார்கள்.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

Back to top button
error: