பொழுதுபோக்குதமிழ்நாடு

தித்திப்பான வாழைப்பழ அல்வா ரெசிபி..!

வாழைப்பழத்தில் இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையிலான அல்வா ரெசிப்பி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையானவை

வாழைப்பழம் – 3
சர்க்கரை – 250 கிராம்
நெய் – கால் கப்
பாதாம் – 5
முந்திரி – 5
சோள மாவு – 5 ஸ்பூன்

செய்முறை

வாழைப்பழத்தை தோல் நீக்கி மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து வாணலியில் நெய் ஊற்றி பாதாம், முந்திரி போட்டு வறுத்துக் கொள்ளவும். அடுத்து வாணலியில் அரைத்த வாழைப்பழம் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறிக் கொள்ளவும்.

அடுத்து சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து ஊற்றி நெய் பிரியும் வரை கிளறவும். அடுத்து இதில் பாதாம், முந்திரியை சேர்த்து கிளறி இறக்கினால் வாழைப்பழ அல்வா ரெடி.

Back to top button
error: Content is protected !!