இந்தியா

சட்டீஸ்கரில் ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது முன்பக்‍க கண்ணாடியில் விரிசல்..!

சட்டீஸ்கரில், மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பயணம் செய்த ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது, முன்பக்‍க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. சூரஜ்புர் பகுதியில் கட்டுமானப் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் சிங் டியோ, ஹெலிகாப்டர் மூலம் அங்கு ஆய்வு நடத்தச் சென்றார். சூரஜ்புரில் ஹெலிகாப்டர் தரையிறங்கும்போது, அதன் காற்று கவசம் எனப்படும் முன்பக்‍க கண்ணாடிகளில் விரிசல் ஏற்பட்டது. எனினும், பத்திரமாக தரையிறக்‍கப்பட்டதால் உயிர்சேதம் தவிர்க்‍கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: