தமிழ்நாடு

அரசு ஊழியர்களுக்கு ரூ.4000 வழங்க தடை? நீதிமன்றம் முடித்து வைப்பு!!

தமிழக அரசு கொரோனா கால கட்டத்தில் மக்கள் பயனடையும் வகையில் ரேஷன் கடைகள் மூலம் நிவாரண தொகை மற்றும் பொருட்களை வழங்கியது. இதனை அரசு ஊழியர்கள் பெறுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் மாநில மக்கள் கடும் நிதிச்சுமைக்கு உள்ளாகி வந்தனர். அவர்களை பாதுகாக்கும் பொருட்டு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் ரேஷன் கடைகள் மூலம் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.4000 (ரூ.2000 + ரூ.2000) மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் திருச்செந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில் அவர் கூறியதாவது, அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு கொரோனா கால கட்டத்தில் வருமான இழப்பு இல்லை. ஆகையால் அவர்களுக்கு நிவாரணம் வழங்க தடை விதிக்க வேண்டும் என்றும் தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் கூறி வழக்கு தொடர்ந்தார். இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று கூறி தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இந்நிலையில் தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அவர்கள் கூறியதாவது, தமிழகத்தில் நிவாரணம் வழங்கும் பணிகள் முழுமையாக முடிந்து விட்டது. பயனாளிகளிடம் வேறுபாடுகள் காட்ட இயலாது என்று தெரிவித்தார். இதை பதிவு செய்து இந்த வழக்கு விசாரணையை முடித்து வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: