இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு..

கடந்த 24 மணி நேரத்தில் 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,28,01,785 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 630 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,66,177 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,17,92,135 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 59,856 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 8,43,473 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

நாடு முழுவதும் நேற்று வரை 8,70,77,474 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: