இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரம்…

இந்தியாவில் காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 9,102 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி குறைந்துள்ளது.

இதற்கு முன் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3-ந்தேதி 8,909 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். மே மாதம் 103 பேர் உயிரிழந்திருந்தனர்.

தற்போது வரை இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,06,76,838 ஆக உள்ளது. இதில் 1,03,45,985 பேர் குணமடைந்துள்ளனர். இது குணமடைந்தவர்களின் சதவீதம் 96.90 ஆகும். தற்போது வரை 1,77,266 கொரோனா தொற்றுடன் உள்ளனர்.

இந்தியாவில் ஆகஸ்ட் 7-ந்தேதி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் 23-ந்தேதி அது 30 லட்சமாக அதிகரித்தது. செப்டம்பர் 5-ந்தேதி 40 லட்சத்தையும், செப்டம்பர் 16-ந்தேதி 50 லட்சத்தையும் தொட்டது. டிசம்பர் 19-ந்தேதி ஒரு கோடியை எட்டியது.

Back to top button
error: Content is protected !!