உலகம்

கொரோனா தடுப்பு மருந்து “ரெம்டெஸிவர்”- உலக சுகாதார நிறுவனம் தடை விதிப்பு

கொரோனாவுக்கு முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட ரெம்டெஸிவர் என்ற தடுப்பு மருந்து கொரோனாவை குணப்படுத்தும் என்பதற்கான எந்தவித ஆதரமும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தடை விதித்துள்ளது. மேலும் ஐரோப்பிய யூனியன் தடுப்பு மருந்தை வாங்குவதற்கு கில்லெட் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

“ரெம்டெஸிவர்” மருந்து

உலகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவியது. இன்று வரை இதன் ஆட்டம் குறைந்தபாடு இல்லை. ஒவ்வொரு நாடும் இதற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சியில் இறங்கி உள்ளது. அப்போது கில்லெட் என்ற நிறுவனம் முதன்முதலில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடித்தது. அந்த மருந்துக்கு “ரெம்டெஸிவர்” என்ற பெயரையும் வழங்கியது.

remdesivir 1

இத்தகைய மருந்து கொரோனாவை அழிக்கும் சக்தி வாய்ந்ததாக கருதப்பட்டதால் இந்த மருந்தை கொரோனா பாதிக்கபட்டவருக்கு வழங்கப்பட்டு வந்தது. ஐரோப்பிய யூனியன் 5 லட்ச டோஸ் ரெம்டெஸிவர் மருந்தை வாங்குவதற்கு ஒப்பந்தமிட்டுள்ளது.

தடுப்பு மருந்துக்கு தடை

கொரோனாவை அழிக்கும் திறன் வாய்ந்தாக கருதப்பட்ட ரெம்டெஸிவர் என்ற கொரோனா தடுப்பு மருந்துக்கு உலக சுகாதார நிறுவனம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட பலருக்கும் இந்த மருந்து கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இது கொரோனாவை அழிக்கும் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று நோயாளிகளை வைத்து எடுக்கப்பட்ட 7000 சோதனை ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த மருந்தை யாருக்கும் அளிக்கக்கூடாது குறிப்பாக கொரோனா தீவிர சிகிச்சையில் உள்ளவர்கள்.

loading...
Back to top button
error: Content is protected !!