உலகம்

கொரோனா தடுப்பூசி விலை அறிவிப்பு! பிரபல நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தகவல்

கொரோனா தடுப்பூசியின் விலை குறித்து முக்கிய தகவலை மாடர்னா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட்டுள்ளார்.

ஆர்டர் கொடுக்கும் அளவைப் பொறுத்து கொரோனா தடுப்பூசியின ஒரு டோஸ் 25 டாலர் முதல் 35 டாலர் வரை விற்க இருப்பதாக மாடர்னா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் அறிவித்துள்ளார்.

மாடர்னா நிறுவத்துடன் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

ஒரு டோஸ் 25 டாலருக்கும் குறைவான விலை என மில்லியன் கணக்கான டோஸை வழங்குவதற்காக மாடர்னாவுடன் ஒப்பந்தத்தை எட்ட ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் கூறினார்.

இதுவரை ஒப்பந்தம் எட்டப்படவில்லை, ஆனால் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்துடன் ஒப்பந்தம் எட்டும் நிலையில் இருக்கிறோம்.

நாங்கள் ஐரோப்பாவிற்கு தடுப்பூசி வழங்க விரும்புகிறோம், அதற்கான ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம், இன்னும் சில நாட்களில் ஒப்பந்தம் எட்டப்படும் என்று மாடர்னா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் கூறினார்.

மாடர்னா நிறுவனம் தயாரித்த கொரோனா தடுப்பூசி 94.5% பலம் தருவதாக சோதனையில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

loading...
Back to top button
error: Content is protected !!