இந்தியா

6 நாட்களில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி!

“இந்தியாவில் 6 நாட்களில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனைப் படைத்துள்ளது” என மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

கொரோனோ தடுப்பூசி குறித்து நேற்று (ஜனவரி 28) மாலை பேசிய ராஜேஷ் பூஷண், “குறுகிய நாட்களில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் நாடு இந்தியா. இந்தியாவில் கடந்த 16ஆம் தேதியில் இருந்து கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து செலுத்தப்பட்டு வருகிறது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று (ஜனவரி 28) மதியம் வரை 25 லட்சத்துக்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளவர்,

மேலும், “இந்தியாவில் 6 நாட்களில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அமெரிக்காவில் 10 நாட்களில்தான் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஸ்பெயினில் 12 நாட்களிலும், இஸ்ரேலில் 14 நாட்களிலும், இங்கிலாந்தில் 18 நாட்களிலும், இத்தாலியில் 19 நாட்களிலும், ஜெர்மனியில் 20 நாட்களிலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் 27 நாட்களிலும் 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்தியாவில் இரண்டு மாநிலங்களில்தான் 40,000க்கும் மேற்பட்டோர் கொரோனா சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிராவில் 44,000 பேரும், கேரளாவில் 72,000 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

Back to top button
error: Content is protected !!