தமிழ்நாடு

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டண மாற்றம் – அரசு அறிவிப்பு!!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கொரோனா சிகிச்சைக்காக வசூலிக்கப்படும் கட்டணத்தை மாற்றியமைத்து அதற்கான அரசாணையையும் அரசு வெளியிட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக அரசு நிர்ணயித்த அளவு கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா சிகிச்சைக்காக இதுவரை வசூலிக்கப்பட்டு வந்த கட்டண முறையை மாற்றியமைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

அதாவது தமிழகம் முழுவதும் தற்பொழுது கொரோனா 2 ஆம் அலை தொற்று முடிவுக்கு வந்துள்ள நிலையில், அதன் சிகிச்சைக்கான கட்டணத்தை மாற்றியமைப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவித்து அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தனியார் மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய கொரோனா சிகிச்சைக்கு, முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் தினசரி ரூ. 7,500 மட்டுமே கட்டணமாக வசூலிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணமானது இதுவரை ரூ. 15,000 ஆக வசூலிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கதாகும். இதனுடன் சாதாரண படுக்கை வசதிகள் கொண்ட சிகிச்சைக்கு தினசரி ரூ.5000 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தவிர வெண்டிலேட்டர் வசதியற்ற தீவிர சிகிச்சைக்கு தினசரி ரூ. 30,000 மற்றும் தீவிர சிகிச்சை பிரிவுக்கு ரூ. 25,000 யாக கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. தவிர கொரோனவால் பாதிக்கப்பட்டு சுவாச செயலிழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் வெண்டிலேட்டர் அவசியம் இல்லை என்றால் அதற்கான தொகுப்பு கட்டணமாக ரூ. 27,100 வசூலிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பொழிவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: