உலகம்

மீண்டும் சீனாவை சீண்டும் கொரோனா..!

சீனாவில் மீண்டும் கொரோனா தலைக்காட்டத் துவங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி சீனாவில் புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 21 பேருக்கு தொற்று உறுதியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தவிர 25 பேருக்கு அறிகுறி இல்லாத கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அறிகுறி இல்லாத தொற்று பாதிப்புகளை உறுதி செய்யப்பட்ட பாதிப்பாக சீன சுகாதாரத்துறை அறிவிப்பதில்லை. தற்போதைய நிலவரப்படி குவாங்டாங் மாகாணத்தில் தொற்று பரவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய பாதிப்புகளின் மூலம் சீனாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 91,359 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கொரோனாவால் அங்கு இதுவரை 4,636 பேர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: