சினிமாஇந்தியா

பிரபல தெலுங்கு நடிகருக்கு கொரோனா!

இந்தியாவை ஆட்டிப்படைக்கும் கொரோனாவால் நாளுக்கு நாள் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.இந்த கொடிய தொற்றுக்கு சமீபத்தில் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அல்லு அர்ஜுன், தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சமூக வலைதளத்தில் செய்தியை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது என்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், வாய்ப்பு கிடைத்தால் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். என்னுடையை ரசிகர்களும் நலம் விரும்பிகளும் கவலைப்பட வேண்டாம், நான் நலமுடன் உள்ளேன்” என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: