இந்தியா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,610 பேருக்கு கொரோனா..

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,610- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 11,833- பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 100 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 09 லட்சத்து 37 ஆயிரத்து 320- ஆகும். தொற்று பாதிப்பில் இருந்து 1 கோடியே 06 லட்சத்து 44 ஆயிரத்து 858- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 55 ஆயிரத்து 913- ஆக உள்ளது.

தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 549- ஆகும். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை 89 லட்சத்து 99 ஆயிரத்து 230- ஆக உள்ளது.

Back to top button
error: Content is protected !!