தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை!!

தமிழகத்தில் கோவை மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. அதனை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. கோவையில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மற்ற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் படித்து வரும் நிலையில் அவர்கள் ஒரு வாரத்திற்கு தனிமைபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மாணவ, மாணவிகளை கண்காணிக்க சுகாதார ஆய்வாளர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சுகாதார உதவி ஆய்வாளர்கள் அந்தந்த பகுதியில் உள்ள தங்கும் விடுதிகள், பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடியாக மாணவ, மாணவிகள் வருகை முதலியன குறித்து மாணவர்களுக்கு நோய்த்தொற்று உள்ளதா என்பது குறித்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் மாணவ மாணவிகள் தனி மனித இடைவெளியை பின்பற்றுகின்றனர் என்பது குறித்த ஆய்வுகளை மேற்கொள்வது சுகாதார ஆய்வாளர் தலைமையிலான குழுக்களின் பணியாகும்.

தற்போது கோவை மாநகராட்சியில் ஒரு நாளைக்கு சராசரியாக 6 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், அதில் 70 முதல் 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தரவுகள் கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த நாளை கடைகள் திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  இன்று சென்னை தினம்!
Back to top button
error: