தமிழ்நாடு

கொரோனா நிலவரம் & பள்ளி, கல்லூரிகள் திறப்பு – முதல்வர் ஆலோசனை!!

தமிழகத்தில் கொரோனா பரவல் நிலவரம் குறித்து முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மேலும் பள்ளிகள் திறப்பதில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று முதல் அலை இரண்டாம் அலையை தொடர்ந்து தற்போது தினசரி தொற்று உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் காலத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல் அலட்சியமாக இருந்தனர். இந்நிலையில் நாளுக்கு நாள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாநிலத்தில் செப்டம்பர் 1ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதனால் சுத்திகரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அது குறித்த முடிவுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். கேரள மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கிருந்து தமிழகம் வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து கோவை மற்றும் திருப்பூர் பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று குறித்தும், பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.


உடனுக்குடன் அண்மைச் செய்திகளை தெரிந்து கொள்ள உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பின் தொடருங்க...
Google News - https://bit.ly/3BonVzx
Facebook - https://bit.ly/3iGDsUb
Twitter - https://bit.ly/3v42Kkh

இதையும் படிங்க:  டாஸ்மாக் மதுபான கடைகளில் முக்கிய எச்சரிக்கைை!!
Back to top button
error: