தமிழ்நாடுஆன்மீகம்மாவட்டம்

கொரோனா பரவல் எதிரொலி.. மே-15 வரை தஞ்சை பெரியகோயிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை..!

கொரோனா பரவல் எதிரொலி காரணமாக, தஞ்சாவூர் பெரியக்கோயிலில் இன்று முதல் அடுத்த மாதம் 15-ம் தேதி வரை பக்தர்கள், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கொரோனா காரணமாக, தொல்லியல் துறை கட்டுப்பாட்டிலுள்ள புராதான சின்னங்கள், கோவில்கள், அருங்காட்சியகங்களை மூட மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தஞ்சை பெரியக்கோயிலிலுள்ள 4 நுழைவு வாயில்களும் தடுப்புகள் வைத்து மூடப்பட்டுள்ளன.

இதனால் வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதே சமயம் கோயிலில் வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும் என்றும் பணியாளர்கள், சிவாச்சாரியர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: