தமிழ்நாடு
இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்தவர்களால் கொரோனா பரவல்..

இங்கிலாந்தில் இருந்து கடந்த நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 2300 பேர் தமிழகத்திற்கு திரும்பி உள்ளனர். இவர்களில் 2146 பேரின் முகவரி கண்டறியப்பட்டு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 2122 பேருக்கு கொரோனா இல்லை என்பது தொிய வந்துள்ளது. 24 பேருக்கு கொரோனா இருப்பது குறித்து தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை இங்கிலாந்தில் இருந்து திரும்பிய இந்த 24 பேருடன் தொடர்புடைய 20 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது தொிய வந்துள்ளது.