இந்தியாஉலகம்தமிழ்நாடு

அரசியல் தலைவர்களுக்கு கொரோனா கடிதம் இன்டர்போல் எச்சரிக்கை..

உலகம் முழுவதும் கொரோனா பரவியிருக்கும் நிலையில், அரசியல் தலைவர்களை குறிவைத்து கொரோனா நோய் தொற்றை சமூக விரோத கும்பல் பயன்படுத்தலாம் என இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் இன்டர்போல் போலீசார் எச்சரித்துள்ளனர்.

சட்ட அமலாக்க அதிகாரிகள், சுகாதார பயிற்சியாளர்கள் மற்றும் முக்கிய ஊழியர்களை மிரட்டும் வகையில் எச்சில் உமிழ்வது மற்றும் அவர்களது முகத்துக்கு நேராக இருமுவது உள்ளிட்ட சம்பவங்கள் நடப்பது குறித்து குறிப்பிட்டுள்ள இன்டர்போல் போலீசார், கொரோனா தொற்றுள்ளவர்களின் எச்சில் தடவப்பட்ட கடிதங்கள் அரசியல் தலைவர்கள் மற்றும் தனிநபர்களுக்கு அனுப்பிவைக்கப்படலாம் என எச்சரித்துள்ளனர். இந்த விஷயத்தில் முக்கிய தலைவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்..

loading...
Back to top button
error: Content is protected !!