இந்தியா

இந்தியாவில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா.. 1,341 பேர் பலி!

இந்தியாவில் தற்போது தொடர்ந்து மூன்றாவது நாளாக கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது. நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,341 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர்.

உலக அளவில் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருகிறது. இந்தியாவில் தொடர்ந்து மூன்றாவது நாளாக சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் கொரோனவால் 2,34,692 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,45,26,609 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நாட்டில் நேற்று ஒரே நாளில் 1,341 பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,75,649 ஆக அதிகரித்துள்ளது.

GettyImages 1219566031 crop

நேற்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 1,23,354 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,26,71,220 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் 1,09,997 பேர் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். நாட்டில் தற்போது அதிக அளவில் தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையிலும் பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் பீதி அடைந்து வருகின்றனர்.

இதையும் படிங்க:  18 வயது மேற்பட்டோருக்கு தடுப்பூசி.. முன்பதிவு தேதி அறிவிப்பு..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: