விளையாட்டு

இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று..

தாய்லாந்து ஓபன் 2021 தொடரில் கலந்து கொள்வதற்கு முன்னர் நடத்தப்பட்ட சோதனையில் இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகி உள்ளது. இதனால் அவர் போட்டிகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளார்.

கொரோனா தொற்று:

ஏஸ் இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் தாய்லாந்து ஓபனுக்கு முன்னதாக நேற்று 3வது முறையாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதற்கான முடிவுகள் இன்று வெளியான நிலையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. சாய்னா தாய்லாந்து ஓபன் 2021 இல் பங்கேற்கத் தயாராக இருந்த நிலையில், போட்டிகளில் இருந்து விலகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளார்.

மேலும் மற்றொரு இந்திய பேட்மின்டன் வீரரான எச்.எஸ்.பிரனோய் போட்டிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. ஜனவரி 6 ஆம் தேதி, தாய்லாந்து ஓபனில் பங்கேற்க இருந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட குழுவினர் 824 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர்.

saina prannoy

அந்த சமயத்தில் வீரர்கள் மற்றும் அவர்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் அனைத்து ஸ்பான்சர்கள், நடுவர்கள், பேட்மிண்டன் உலக கூட்டமைப்பின் (BWF) பணியாளர்கள், தாய்லாந்தின் பேட்மின்டன் சங்கம், மருத்துவ ஊழியர்கள் மற்றும் தொலைக்காட்சி குழுவினர் என அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஏற்கனவே BWF வெளியிட்ட அறிக்கையில் “தொடரில் பங்கேற்க உள்ள அனைவரும் பாங்காக்கிற்கு புறப்படுவதற்கு முன்னர் தங்கள் சொந்த நாட்டில் கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும், பின்னர் பாங்காங்கில் ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் மீண்டும் பாங்காக்கில் சோதனை செய்யப்படுவர்” என தெரிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

Back to top button
error: Content is protected !!