இந்தியாவிளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க இருந்த இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று..!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இருந்த இந்திய வீரர்கள் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 24வது தேசிய கூட்டமைப்பு கோப்பை தடகள சாம்பியன்ஷ் போட்டி பாட்டியாலாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற 313 பேருக்கு கொரோனா தொற்று சோதனை நடத்தப்பட்டதாகவும், அவர்களில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் இந்திய விளையாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 5 பேர் ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க இருந்த தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் கேரளாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்களைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படாத நிலையில் தொற்று ஏற்பட்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: