இந்தியா

இந்தியாவில் புதிதாக 1,45,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,45,384 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,05,926 உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 794 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,68,436 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,19,90,859 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 77,567 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 10,46,631 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 9,80,75,160 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: