தமிழ்நாடுமாவட்டம்

கொரோனா பாதிப்புக்குள்ளான முதியவர்.. வி‌ஷம் குடித்து தற்கொலை..!

மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளத்தை சேர்ந்த 73 வயது முதியவர் ஒருவருக்கு கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது.

நேற்று வெளியான முடிவில் முதியவருக்கு தொற்று இருப்பது உறுதியானது. உடனே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேரும்படி அவருக்கு மருத்துவமனை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மனம் உடைந்த அந்த முதியவர் வி‌ஷம் குடித்து அப்பகுதியில் மயங்கி கிடந்துள்ளார். உடனே அவரை உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு இறந்தார்.

இதனால் மாவட்டத்தில் மொத்த பலி எண்ணிக்கை 218 ஆக உயர்ந்தது. இன்று அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க:  திமுக எம்.பி., கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: